மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் துரைப்பாண்டி. இவரது மகன் கதிர்வேல் (36). ராணுவ வீரராக பணியாற்றிய இவர் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இன்று (ஜூலை.24) உயிரிழந்தார்.
கதிர்வேலுக்கு திருமணமாகி சண்முகப்பிரியா என்ற மனைவியும் ஹனிஸ்க் , பார்த்திவ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கதிர்வேலின் உடலை ராணுவ அலுவலர்கள் மீட்டு அசாம் மாநிலத்திலுள்ள ராணுவ தலைமையகத்திற்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் இன்று (ஜூலை.24) இரவு 8.30 மணி அளவில் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: