மதுரை ஆழ்வார்புரம் சந்திப்பில் நேற்று பாதாள சாக்கடை பொங்கி பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள், வியாபாரிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உருவானது.
ஆனால்,வெகுநேரமாகியும் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் வழிந்தோடும் சாக்கடையை சீரமைக்காததால் அப்பகுதி முழுவதும் சாக்கடை நீரால் நிரம்பி காணப்பட்டது. சுகாதார சீர்கேடு பரவுவதைத் தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: காதலி சொன்னதுபோல் வராத ஆத்திரம் - போலீஸ் பூத் மீது குண்டு வீசிய காதலன் கைது!