ETV Bharat / state

9 மாதமாக நடைபெற்றுவரும் மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணிகள்...! - மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணிகள்

மதுரை: ஒன்பது மாத காலமாக நடைபெற்றுவரும் மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்ளிட்டவை முடிவடைந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

AIMS
AIMS
author img

By

Published : Oct 9, 2020, 6:15 PM IST

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தொடக்கப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தன. சுற்றுச்சுவர் அமைப்பதற்காக 2019 நவம்பர் மாதம் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கப்பட்டன.

அதே நேரத்தில் மத்திய சாலை நிதித் திட்டத்தின் மூலம் ரூ.21.20 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து 6.4 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மே மாத இறுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மே 3ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை ஏற்படுத்தியதில் அரசு கட்டுமான பணிகள் அனைத்தும் குறைந்த ஆட்களைக் கொண்டு செயல்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.

அறிவிப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியானது மே 6ஆம் தேதிமுதல் குறைந்த ஆட்களைக் கொண்டு வேலைகள் தொடங்கப்பட்டன.

ஏற்கெனவே 85 விழுக்காடு சுற்றுச்சுவர் அமைக்கும் வேலைகள் முடிவடைந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதம் வரையில் முடிவடையாமல் இருந்துவருவதோடு, கட்டட பணிகள் டிசம்பர் மாதம் இறுதியில் ஜப்பான் நிதிக் குழுவிடம் நிதி பெற்று பணிகள் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மற்ற மாநிலங்களில் நடைபெற எய்ம்ஸ் கட்டுமான பணியின் நிலை குறித்தும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஒன்பது மாத காலமாக நடைபெற்றுவரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிவடையாத நிலையில், சுற்றுச்சுவர் பணி முடிவடைந்த பிறகே குடிநீர், மின்சாரம், அடித்தளங்கள் அமைக்கும் வேலைகள் தொடங்கப்படும் நிலையில் மதுரைக்கு எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.