ETV Bharat / state

"ஏதாவது சொன்னால் விஜய் ரசிகர்கள் திட்டுவார்கள்" - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தன் கருத்துகளை மதுரை ஆதீனம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்  மதுரை ஆதினம் பேச்சு

author img

By

Published : Jun 17, 2023, 5:24 PM IST

Updated : Jun 17, 2023, 6:37 PM IST

விஜய் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்... நான் ஏதாவது சொன்னால் ரசிகர்கள் திட்டுவார்கள் - மதுரை ஆதீனம்

மதுரை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரி அளித்த பேட்டியில், இந்தியாவிற்கான அடுத்த பிரதமர் தமிழ்நாட்டிலிருந்து என அமித் ஷா கூறினார்.... அது பற்றி உங்களுடைய கருத்து என கேட்கப்பட்ட போது, “தமிழர்கள் தாராளமாக வரலாமே, ஏன் தமிழர்கள் வரக்கூடாதா? தமிழ் மண்னை ஆண்ட ராஜராஜ சோழன் இங்கிருந்து கடாரம் வரை சென்று புலிக்கொடியை நாட்டினார். அதுபோல தான் யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமராக தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலையா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்ற கேள்விக்கு, ''அது ஆண்டவனின் கணக்கு, அதை நாம் தீர்மானிக்க முடியாது'' என்றார். பின்னர் தற்போதைய நடைமுறை சினிமா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்த கால சினிமாக்களில் தேச பக்தி மற்றும் தெய்வ பக்தி நிறைந்து இருந்தது. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களைப் பார்த்தபோது என்னை மெய்சிலிர்க்க வைத்தது, ஆனால் தற்போதைய படங்கள் ஏதும் தேச பக்தி மற்றும் தெய்வபக்தி நிறைந்தவையாக இல்லை. மேலும் படங்கள் பார்ப்பது பார்க்காமல் இருப்பது அவரவர் விருப்பம்” எனத் தெரிவித்தார்.

பின்னர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை என்றார். அப்போது பேசிய அவர், ''அவரது வருகை பற்றி நான் ஏதும் கூறினால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள். எனக்கு தேவை இல்லாத பிரச்னை வேண்டாம். அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்’’ எனப் பேசியிருந்தார்.

மதுரை ஆதீனம் கடந்த வருடம் அளித்திருந்த பேட்டியில், ’’சினிமா நடிகர்கள் படங்களில் இந்து மதத்தைத் தவிர, மற்ற மதத்தைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கிறார்கள். ஆனால், இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். மேலும் நடிகர் விஜய் தனது படங்களில் இந்துக் கடவுளை இழிவுபடுத்துகிறார்’’ எனக் கூறியிருந்தார்.

முன்னதாக நடிகர் விஜய் குறித்த பல்வேறு சர்ச்சைகளில் அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா எனக் கேள்விகள் எழுந்திருந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அதற்கான விடை கிடைத்துவிடும் எனப் பலர் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தன. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் நடித்து வரும் படங்களில் மதங்கள் மற்றும் அரசியல் கருத்துகள் அதிகளவில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி எதிர்மறையான வசனங்கள் உள்ளதாக பாஜகவினர் படத்தை தடை செய்ய வேண்டும் எனப் போராடினர். மேலும் இன்று 10,12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய் அந்த விழாவில் ”மாணவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜரைப் பற்றி படிக்க வேண்டும்” எனக் கூறியது அவரின் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதத்திலானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: நாளைய வாக்காளர்களே... புதிய தலைவர்கள் வருகிறார்கள் - நடிகர் விஜய் பேச்சு

Last Updated : Jun 17, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.