ETV Bharat / state

'உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்' - மதுரை ஆதீனம் - மனிதனை மனிதன் தூக்கிச்செல்லும் பட்டினப்பிரவேசத்தை நிறுத்த வேண்டும்

'உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய தருமபுரம் பட்டினப்பிரவேசத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து நடத்த வேண்டும். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கைச் சுமப்பேன், உயிரே போனாலும் பரவாயில்லை' என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கைச் சுமப்பேன், உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம்  madurai Adheenam says I will give my life to my Guru Dharmapuram Adheenam pattina pravesam உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம் - மதுரை ஆதீனம்
நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கைச் சுமப்பேன், உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் madurai Adheenam says I will give my life to my Guru Dharmapuram Adheenam pattina pravesamஉயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம் - மதுரை ஆதீனம்
author img

By

Published : May 3, 2022, 3:03 PM IST

மதுரை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவை இந்த ஆண்டு அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மதுரை ஆதீனம் 293ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நான் தருமபுர ஆதீனத்தில் தான் படித்தேன். தருமபுர ஆதீனத்தில் தேவாரப் பாடசாலை, சைவநெறி பாடசாலை அமைக்கப்பட்டு அறம் வளர்க்கப்பட்டது. தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்.

தருமபுர ஆதீன பட்டின பிரவேசம்
தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம்

ஆளுநர் விவகாரம் தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி ரத்துக்குக் காரணம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது. இந்திய குடியரசுத் தலைவரே விரும்பிய ஆதீனம், வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது. இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

முதலமைச்சர் ரகசிய காப்பு பிரமாணம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என ஏன் சொல்லக்கூடாதோ அது போலத்தான் இந்நிகழ்ச்சி. பாரம்பரிய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. திருநாவுக்கரசர் பல்லக்கை திருஞானசம்பந்தர் சுமந்துள்ளார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

’உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்.. ஸ்டாலின் நேரில் வந்து நடத்த வேண்டும்’ - மதுரை ஆதீனம்

தருமபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கும். தருமபுரம் பட்டினப்பிரவேசத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து நடத்த வேண்டும். முதலமைச்சர் இந்நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். அரசு உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் சொல்வேன்.

நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கைச் சுமப்பேன், உயிரே போனாலும் பரவாயில்லை. நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடியவன். அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு அல்ல. சிலர் எதிர்ப்பதற்காகப் பாரம்பரிய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்? என்னை வேண்டுமானால் சுடட்டும். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்லும் நிகழ்வு.

மதுரை ஆதீனம் 293ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

தமிழ்த்தாய் கொலுவிருக்கும் இடம்தான் ஆதீனம். எப்படி போப் ஆண்டவரைப் போய் சந்திக்கிறார்களோ அது போலத்தான் தமிழ் சைவ நெறிக்கு ஆதீனங்கள் உள்ளது. திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கக்கூடாது" எனக் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஆன்மீக அரசு: தருமபுரம் ஆதீனம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.