கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், காலையில் அங்காடிகள் பக்கம் சென்றால் சற்று கோபம் தான் வருகிறது, மக்களின் பொறுப்பின்மை கண்டு.
தினம், தினம் காய்கறிகள் வாங்க, கபசூரக்குடிநீர் பருக, இரு சக்கர வாகனங்களில் பொருட்கள் வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள், அரிசிக்கடைகளில் மக்கள் வரிசை. மீன் கடை, கோழி கடை, கறிக்கடை, மருந்து என்று பல்வேறு காரணங்களுக்காக, வெளியில் திரியும் மக்கள்.
தங்கள் பகுதியில் கடைகள் இருந்தாலும், வேறுப் பகுதிகளுக்கு சென்று பொருள்கள் வாங்கச் செல்வது என கொஞ்சம் கூட கட்டுப்பாடும், ஒழுக்கமும் இல்லாத மக்களை என்னதான் செய்வது?" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல்