ETV Bharat / state

மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு - வெட்ட

மதுரை: ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கில் கிளைகளை மட்டும் வெட்டி கொள்ள அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை
author img

By

Published : Mar 14, 2019, 11:42 PM IST

ராமநாதபுரத்தில் உள்ள சையது அம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த பாபு அப்துல்லா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியதாவது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஹெச் - 49ல் அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் வழியாக ராமேஸ்வரத்தை இணைக்கும் சாலையின் ஓரங்களில் பல மரங்கள் நடப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடந்த 2008 ம் ஆண்டு வளர்ச்சியடைந்த மரங்களை வெட்டுவதற்காக ராமநாதபுரம் நகராட்சி துறையினர் முடிவு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதில், மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மரங்களை வெட்டுவது குறித்து மனு அளிக்கபட்டுள்ளது. அதில் 150 மரங்களில் 80 முதல் 90 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யபட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் பறவைகள் மரங்களில் ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாலும், வெயில் காலத்தில் வாகன ஓட்டிகள் நிழலில் ஒதுங்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும், எனவே ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர், மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டி கொள்ள உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் உள்ள சையது அம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த பாபு அப்துல்லாஹ்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

அதில் "ராமநாதபுரம் மாவட்டத்தில் NH 49  சாலை அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன்  வழியாக செல்கிறது. இந்த சாலை ரமேஸ்வரத்தை இணைக்கும் சாலையில் முக்கியமான சாலையாகும். இந்த சாலை ஓரங்களில் கடந்த 2001 ம் ஆண்டு பல மரங்களை நடப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு வளர்ச்சியடைந்த மரங்களை வெட்டுவதற்காக ராமநாதபுரம் நகராட்சி துறையினர் குறியீடு வைத்த நிலையில் 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டலாம் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 5 ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மரங்களை வெட்டுவது குறித்து மனு அளித்தோம். அச்சுந்தன்்வயல் இருந்து பட்டினம்காத்தன் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது ,இதில் 150 மரங்களில் 80 முதல் 90 மரங்களை வெட்டுவதற்கு குறியீட்டுள்ளது. இதனால் அப்பகுதில் பறவைகள் மரங்களில் ஒதுங்க முடியாது சூழ்நிலை ஏற்படுவதோடு, வெயில் காலத்தில் வாகன ஓட்டிகள் நிழலில் ஒதுங்க முடியாத சூழல் ஏற்படும். எனவே ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என  கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.