ETV Bharat / state

கையால் மலம் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு குழு - நீதிமன்றம் அதிரடி ஆணை - Madras high court madurai bench

மனிதன் கையால் மலம் அள்ளுவதை தடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் கோரி மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Etv Bharatகையால் மலம் அள்ளுபவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Dec 22, 2022, 8:03 AM IST

மதுரை: மனிதன் கையால் மலம் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணையில் கழிவுநீர் மற்றும் சாக்கடைகள் இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், 'கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதைக் கண்காணிக்கும் வகையில் மாநிலந்தோறும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வுகள் மேற் கொண்டு இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலான உபகரணங்கள் இல்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படுவதில்லை. ரயில்வே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பலர் தொடர்ந்து கையால் அள்ளும் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்களை கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனித கழிவை மனிதனே அகற்றும் முறையை வேரோடு அகற்றிடும் வகையில் கையால் மலம் அள்ளும் வகையில் பணியில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கழிவுநீர் மற்றும் சாக்கடைகள் இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கையால் மலம் அள்ளுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

மறுவாழ்வு வழங்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஈடுபட கட்டாயப் படுத்தக் கூடாது. மனித கழிவை மனிதன் அகற்றுவதில் உள்ள தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்களின் சமூக தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதுவரை இழப்பீடு வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நார்கோ சோதனை மூலம் கடினமான வழக்குகளைத் தீர்க்க முடியுமா? விசாரணையில் என்னென்ன சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.