கடம்பூரைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " கரோனா ஊரடங்கால் தமிழ்நாட்டிலுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும். இதனால் வருமானமும் ஓரளவுக்கு கிடைக்கும். தற்போதைய ஊரடங்கால் நாட்டுப்புற கலைஞர்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.
எனவே, நாட்டுப்புற கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் மேம்பாட்டிற்கு உதவ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேணடுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.