மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பாண்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை மாவட்டம் அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இதயக்கனி என்பவர், 17 வயதான எனது மகளை கடத்திச் சென்றுவிட்டார். இது தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், எனது மகளை இதயக்கனி திருமணம் செய்துகொண்டதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால் தற்போது வரை எனது மகளை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தவில்லை. எனது மகள் மைனராக இருக்கும் நிலையில், அவர் பாதுகாப்பாக உள்ளரா? என்பது தொடர்பாக அச்சம் உள்ளது. ஆகவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், கிருஷ்ணகிரி அமர்வு, இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சிறுமி கடத்தப்பட்டு திருமணம்: எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு - ஆட்கொணர்வு மனு
மதுரை: சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்ட வழக்கு தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
![சிறுமி கடத்தப்பட்டு திருமணம்: எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு மதுரை கிளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:02:14:1602153134-tn-mdu-hc-04-girl-child-kitnap-marriage-script-7208110-08102020155813-0810f-1602152893-1069.jpg?imwidth=3840)