ETV Bharat / state

அரசு ஆன்லைன் டெண்டர்: முன்வைப்புத் தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை - அரசு ஆன்லைன் டெண்டர்

மதுரை: அரசு ஆன்லைன் டெண்டர் முறையில் இனி முன்வைப்பு தொகையை வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்துமாறு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Sep 19, 2020, 7:37 PM IST

திருச்சி தனியார் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனுவில், "திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான 100 மின்கல (பேட்டரி) வாகனங்கள் சப்ளை செய்வதற்கான இரண்டு கோடியே 20 லட்சத்திற்கான (டெண்டர்) ஒப்பந்த அறிவிப்பு ஜூன் 12இல் வெளியானது. ஜூலை 15-க்குள் டெண்டர் காலம் முடியும்.

இதற்கு ஒப்பந்த முன்வைப்புத் தொகையாக ரூ.4.40 லட்சம் செலுத்த காசோலையாகச் செலுத்த வேண்டும். இந்த முன்வைப்புத் தொகையை எங்கள் நிறுவனம் செலுத்தியது.

ஆனால் முன்வைப்புத் தொகைக்கான காசோலையை செலுத்தவில்லையெனக் கூறி டெண்டரில் எங்களது நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எனவே, முறைகேடாக நிராகரித்த உத்தரவை ரத்துசெய்து எனது நிறுவனத்தையும் ஒப்பந்தம் எடுக்க பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரனை செய்து உத்தரவுக்காக ஒத்திவைத்திருந்தார்.

ஆன்லைனில் டெண்டர் கோரும்போது ஒப்பந்தத்திற்கான முன்வைப்புத் தொகையாக காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் செலுத்த வேண்டுமென்பதும் சரியான நடைமுறை அல்ல.

திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்தத்தில் விண்ணப்பித்த 7 பேரில் 6 பேரை நிராகரித்து ஒருவரை மட்டும் வைத்து தேர்வு செய்துள்ளனர் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருச்சி மாநகராட்சி தரப்பில் புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இனிவரும் காலங்களில் டெண்டர்களுக்கான முன்வைப்புத் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும்வகையில் வங்கிக் கணக்குத் தொடங்கி அந்தக் கணக்கில் ஒப்பந்ததாரர்கள் நேரடியாக முன்வைப்புத் தொகை செலுத்துமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.

மேலும் ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்து மீண்டும் புதிதாக ஒப்பந்த அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.