ETV Bharat / state

காட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - theatre issue

50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் பட்சத்தில் காட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

tn_mdu_hc_01_theatre_seat_script_7208110

author img

By

Published : Jan 8, 2021, 12:51 PM IST

மதுரை: தமிழ்நாடு அரசு 100 சதவீத ஆட்களுடன் திரையரங்குகள் செயல்பட வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மத்திய பேரிடர் மேலாண்மை துறை விதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசு திரையரங்குகளில் 100% இருக்கையுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. புதிய உருமாறிய கரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இந்த நிலையில் திரையரங்குகள் 100% இருக்கையுடன் செயல்படுவது மிக ஆபத்தை விளைவிக்கும். மேலும் காட்சிகள் திரையரங்குகளில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் வேலை செய்பவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

100% இருக்கைகள் உடன் செயல்பட மத்திய அரசு கடும் எதிர்ப்பு

மத்திய அரசு தரப்பில் 50% இருக்கையுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கு, வணிக வளாகம் மற்றும் பொழுபோக்கு விடுதிகளில் இருக்கைகள் எவ்வாறு தகுந்த இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய தலைமைச் செயலரும் மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

திரையரங்க உரிமையாளர் சங்கத்தை இந்த வழக்கில் சேர்க்கக் கோரி மனு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றனர். திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் கூறும்போது, விமானங்களில் 220 இருக்கைகள் உள்ளது அங்கு முழுமையாக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் திரையரங்குகளிலும் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார். 10 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் செயல்படாமல் உள்ளது. முழு இருக்கைகளுடன் செயல்படுவதற்கு திரையரங்குகளில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. திரையரங்குகளுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சோதனைக்கு பின்பே திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

தமிழக அரசு சார்பாக பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் ஜனவரி 11ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும். கரோனா காலத்தில் திரையரங்க உரிமையாளர்களின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.

50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் பட்சத்தில் காட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.