உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கடந்த ஐந்து மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்றுமுதல் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக் கட்டண தரிசனம்செய்யும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கிழக்கு கோபுரம் அருகே உள்ள அம்மன் சன்னதி வழியாகவும் வருகைதர கோயில் நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.