ETV Bharat / state

மோடி அரசு பொருளாதாரத்தை பாழடையச் செய்துள்ளது- கே.எஸ். அழகிரி - ks azhagiri pressmeet

மதுரை: மத்தியில் ஆளும் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை பாழடைந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

கே.எஸ். அழகிரி
author img

By

Published : Aug 26, 2019, 7:09 PM IST

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,” பாஜக அரசு இந்தியப் பொருளாதாரத்தை பாழடைந்த நிலைக்கு கொண்டுசென்றுள்ளது. மன்மோகன்சிங் காலத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் என்ற மாளிகையை, இன்றைய மோடி அரசு தாறுமாறாக சிதைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை கட்ட முடியாமல் பார்லே பிஸ்கட் நிறுவனம் ஒரே நாளில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது. நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் காலத்தில் எழுச்சிபெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை குறைந்ததால் தற்போது உற்பத்தியைக் குறைத்துள்ளன.

இவ்வாறான, பொருளாதார நெருக்கடியில்தான் அரசை நடத்துகிறார் மோடி. பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது, வரிவிதிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அந்நிய மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு கொண்டுவருவது போன்ற அடிப்படை அறிவு இல்லாத மத்திய அரசால்தான் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை சீர்திருத்தவில்லையென்றால் விரைவில் இந்தியாவில் பஞ்சமும் வேலையின்மையும் பெருகும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வில், 99 விழுக்காடு ஆசிரியர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதை அரசியல் பிரச்னையாக கருதவில்லை சமூக பிரச்னையாக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு மாற்று முயற்சியை எடுக்க வேண்டும்.

கே.எஸ். அழகிரி

இப்பிரச்னையில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லையெனில், சிறந்த வருங்காலத்தை மாணவர்களுக்கு வழங்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய மூலதனம் கொண்டு வரப்போவதாக சொல்கிறார். இதற்கு முன்பாக நடந்த இரண்டு முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆடம்பரமாக விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 10 ரூபாய்கூட ஒதுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதிலளிக்கவேண்டும்.

2017இல் கண்டறியப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளதே இதற்குக் காரணம்” என்றார்.

Intro:இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கே எஸ் அழகிரி

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சி க்கு கொண்டு சென்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டினார்Body:இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கே எஸ் அழகிரி

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சி க்கு கொண்டு சென்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டினார்

மதுரையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது, பாரதிய ஜனதா அரசு இந்திய பொருளாதாரத்தை மிக மோசமான பாழடைந்த நிலைக்கு கொண்டு செல்கிறது மன்மோகன் சிங் காலத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் என்ற மாளிகையை இன்று தாறுமாறாக எடுத்தது சொல்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அந்நிய மூலதனம் 12,000 கோடி வெளியே சென்று மூலதனம் செய்தவர்கள் திரும்ப பெற்றுள்ளார்கள் நிதி அறிக்கையை வெளியிட்டனர் பார்லே நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளது அவர்கள் சொல்லிய காரணம் ஜிஎஸ்டி வரி கட்ட முடியவில்லை தொழில் நடத்துவதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நீக்குவதாக கூறி உள்ளனர் அதுவும் ஒரே நாளில் 10 ஆயிரம் தொழிலாளர்களை வெளியே நிறுத்தி உள்ளார்கள் ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவில் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் காலத்தில் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருந்தது. இன்று அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன. காரணம் இந்தியாவில் விற்கும் வாய்ப்பு குறைந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

ஒவ்வொரு தொழிலைப் பற்றியும் சொல்ல முடியும் அந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்தை நடத்துகிறார் மோடி. காரணம் தெளிவான சிந்தனை அரசாங்கத்திடம் இல்லை பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது வரிவிதிப்பு எவ்வாறு மேற்கொள்வது அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது அந்நிய மூலதனத்தையும் அந்நிய தொழில்நுட்பத்தையும் எவ்வாறு கொண்டுவருவது எப்படி பாதுகாப்பது என்ற அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினால் இந்திய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது பாமக ராமதாஸ் அவர்கள் பொருளாதார வீழ்ச்சியை அரசு ஒத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்

அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு பொருளாதார பாதிப்பு தெரிகிறது தேசத்தைப் பற்றி அக்கறையில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வில்லை என்றால் விரைவில் இந்தியாவில் பஞ்சமும் வேலையின்மையும் பெருகும் இரண்டரை சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 7 சதவீதமாக உயர்ந்துள்ளது படித்த கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பும் இல்லை இருக்கின்ற வேலை வாய்ப்பும் போய்க் கொண்டிருக்கிறது எனவே அபாய நோக்கத்துடன் பார்க்க வேண்டுமே ஒழிய அன்றாட நிகழ்வாக கருதக்கூடாது அரசு இதில் கவனம் செலுத்தாமல் மூடி மறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்

அதற்காக பல்வேறு புதிய நிகழ்வு களை செயற்கையாக உருவாக்குகிறார்கள் காஷ்மீர் ஆளுநர் நடவடிக்கை எடுத்துக்காட்டாக சொல்லலாம் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தவர் சொந்த நாட்டில் சொந்த மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளே நுழைய கூடாது என்ற தடை விதித்த முதல் ஜனநாயக அரசு மோடியின் அரசு தான்

ஆசிரியர் தேர்வு காரணமாக 99 சதவீத ஆசிரியர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர் அரசியல் பிரச்சனையாக கருதவில்லை சமூக பிரச்சினையாக கருதுகிறேன் தமிழகத்திலுள்ள கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு மாற்று முயற்சியை எடுக்க வேண்டும் அரசு மெத்தனமாக இருக்கிறது அரசு போதிய கவனம் செலுத்தவில்லை இவ்வளவு ஆசிரியர்கள் தோல்வியடைந்தால் சிறந்த வருங்காலத்தை மாணவர்களுக்கு எப்படி வழங்க முடியும் ஊடகங்கள் இதைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்க வேண்டும் சமூகத்தை மேம்படுத்த மிக மிக முக்கியமான கல்வியறிவு கொடுக்காவிட்டால் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதியாக ஆகிவிடும்

முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய மூலதனம் கொண்டு வரப்போவதாக சொல்கிறார் இதற்கு முன்பாக இரண்டு முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக எவ்வளவு மூலதனம் வந்தது எவ்வளவு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆடம்பரமாக விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டது மத்திய பட்ஜெட்டில் 10 ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை காரணம் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி உலக வங்கி கேட்டுள்ள எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் உதயகுமார் மற்றும் முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்

தமிழக அமைச்சர்கள் பாஜக அலுவலகத்தில் அமர்ந்துள்ளனர் குட்கா ஊழல் 2017 கண்டறியப்பட்டு வழக்கு தொடர்ந்து இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை என்ன காரணம் இரண்டு ஆண்டுகள் தமிழக காவல்துறைக்கு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ஆகிறது என்றால் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதை காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.