ETV Bharat / state

கிருத்திகா பட்டேலை கேரளா வழியாக 5 கார்களில் மாற்றி குஜராத்திற்கு கடத்தியுள்ளனர் - அரசு தரப்பு! - High Court Madurai Branch News

தென்காசி காதல் விவகாரத்தில், கிருத்திகா பட்டேலை கேரளா வழியாக 5 கார்களில் அடுத்தடுத்து மாற்றம் செய்து குஜராத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றக்கிளையில் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி காதல் விவகாரம்: கிருத்திகாவின் தரப்பில் தாக்கல் செய்த மனு (பிப்.20)ம் தேதி ஒத்திவைப்பு- மதுரைக்கிளை

author img

By

Published : Feb 14, 2023, 4:47 PM IST

மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பெயரில், அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்தி பட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகிய 4 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகிய 8 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'கிருத்திகா பட்டேல் கடத்தப்படும் சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளன. அவரை கேரளா வழியாக 5 கார்கள் வைத்து அடுத்தடுத்து மாற்றம் செய்து குஜராத் மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, கிருத்திகா பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. கிருத்திகா பட்டேல் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே, ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதைப் பதிவு செய்து வழக்கு விசாரணையை வரும் பிப்.20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:புது ரூட்டில் பண மோசடி; பீகார் இளைஞர் கைது.. சென்னை மேன்சன் பாய்ஸ் உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.