ETV Bharat / state

கொடைக்கானல் போட் ஹவுஸை இயக்க தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - kodaikanal boathouse banned

மதுரை: கொடைக்கானல் படகு குழாமில் மறு உத்தரவு வரும் வரை படகுகளை இயக்க தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

kodaikanal boathouse banned
author img

By

Published : Nov 5, 2019, 11:35 PM IST

கொடைக்கானல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கொடைக்கானலின் மையப்பகுதியில் இயற்கை தந்த வரமாக ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானதாகும். ஏரி அமைந்துள்ள பகுதியில் 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் கிளப்பிற்கு ஒத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கிளப் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அப்பகுதியில் படகு குழாம், கடைகள், கழிப்பறை போன்றவற்றை கட்டி வணிக நோக்கில் செயல்பட்டுவருகிறது. மேலும் இந்த படகு குழாமிற்கு செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், சட்ட விரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகுகளை இயக்குவதன் மூலம் வரும் வருவாய் கொடைக்கானல் நகராட்சிக்கும், மீன்வளத் துறைக்கும் 90 :10 என்ற விகிதத்தில் சென்று சேர வேண்டும். ஆனால் இந்த வருவாய் முழுவதும் தற்போது தனியாருக்கு சென்றுவிடுகிறது.

இதேபோல் ஏரி அருகே உள்ள ஒரு தனியார் விடுதி நிர்வாகமும், ஏரியை வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. இவையனைத்தையும் தடுத்து இந்த படகு குழாம் மூலம் வரும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையில், பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் படகு குழாமில் படகு போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள்!

Intro:கொடைக்கானல் படகு குழாமில் படகு இயக்க தடை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடைக்கானல் படகு குழாமில் மறு உத்தரவு வரும் வரை படகு இயக்க தடை விதித்துஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:கொடைக்கானல் படகு குழாமில் படகு இயக்க தடை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடைக்கானல் படகு குழாமில் மறு உத்தரவு வரும் வரை படகு இயக்க தடை விதித்துஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கொடைக்கானல் ,சீனிவாச புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் கொடைக்கானலின் மையப்பகுதியில்இயற்கை தந்த வரமாக எரி அமைந்துள்ளது.இந்த ஏரியானது முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானதாகும்.இந்த ஏரி அமைந்துள்ள பகுதியில், ஒரு 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் கிளப்பிற்கு ஒத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கிளப் 10 ஆயிரம் ச.அடிக்கும் மேல் உள்ள பகுதியை ஆக்கிரமித்து கொண்டு இப்பகுதியில் படகு குழாம் , கடைகள், கழிப்பறை போன்றவற்றை கட்டி வணிக நோக்கில் செயல் பட்டு வருகிறது.மேலும் இந்த படகு குழாமிற்கு செப்டம்பர் 1 ம் தேதியுடன் (01.09 2019 )அன்றுடன் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், சட்ட விரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு 150க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படும் நிலையில் இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்பட்டு வருகிறது.இந்த ஏரியில் படகு களை இயக்குவதன் மூலம் வரும் வருவாய் கொடைக்கானல் நகராட்சி மற்றும் மீன்வளத் துறைக்கு 90 : 10 என்ற விகிதத்தில் வருவாய் சென்று சேர வேண்டும். ஆனால் இந்த வருவாய் முழுவதும் தற்போது தனியாருக்கு சென்று வருகிறது.இதே போல் ஏரி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகமும், ஏரியை வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது.இவற்றை தடுக்கும் வகையில் . இந்த படகு குழாம் மூலம் வரும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையில், பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் படகு குழாமில் படகு போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.