புதிய மாணவர் சேர்க்கை குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது, 'காமராஜர் பல்கலைக்கழகம் தனது பணிகளைத் தொடர்ந்து நல்லபடியாக செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு 1000 முதல் 1100 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தற்போது 1500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளன.
மேலும் புதிய மாணவர் சேர்க்கை விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை தற்போதுவரை நிர்ணயிக்கவில்லை. எனவே, இன்னும் அதிகமாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேட்டி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வேதியியல் (Chemistry) பாடப்பிரிவு படிப்பதில் தற்போது மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தத் துறைக்குத் தற்போது வரை அதிகபட்சமாக 186 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இயற்பியல் (Physics) மற்றும் உயிரி தொழில்நுட்பம்(Bio-Technology) பாடப்பிரிவுகள் இருந்து வருகிறது. நுழைவுத் தேர்வுகளை நடத்தி மாணவர்களை தேர்வு செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு அறிவிப்பின்படி எங்களது மாணவர் சேர்க்கையைத் தொடர்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறினார்.இதையும் படிங்க: மாணவர்களுக்காக செயலி உருவாக்கிய பேராசிரியர்!