ETV Bharat / state

'தேவையில்லையெனில் சேனலை மாற்றிக்கொள்ளலாம்' - சமஸ்கிருத செய்திக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து! - Sanskrit News in pothigai tv

மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக்கொள்ளலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Jan 18, 2021, 5:49 PM IST

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," பிரசார்பாரதி பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கைக்கோள் சேனல்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பொதிகை தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தினமும் 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை வாசிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதோடு நடைமுறையும் படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறின்றி சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட பழமையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்காததோடு, தமிழ்நாட்டில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே, பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை வாசிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, "மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக்கொள்ளலாம். அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம். இதனை விட பல முக்கியமான பிரச்னைகள் உள்ளன என தெரிவித்தனர்.

தொடர்ந்து, தேவையெனில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது' - வைகைச்செல்வன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.