ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: கிலோ ரூ.2000க்கு விற்பனையாகும் மதுரை மல்லி!

ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை உயர்ந்துள்ளது

கிலோ ரூ.2000 க்கு விற்பனையாகும் மதுரை மல்லி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 2:31 PM IST

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: கிலோ ரூ.2000 க்கு விற்பனையாகும் மதுரை மல்லி

மதுரை: ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகையின் விலை இன்று (செப்.17) கிலோ ரூபாய் இரண்டாயிரத்திற்கு மேல் விற்பனையாகிறது.

மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகில் வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில், மலர் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு சோழவந்தான், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சத்திரப்பட்டி, வலையங்குளம், சிலைமான் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பூக்கள் விற்பனையாகும் நிலையில், மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும், தரம், மணம், தன்மை காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைப் பூ ஒரு நாளைக்கு 7 டன்னுக்கும் மேலாக விற்பனையாகிறது.

இதையும் படிங்க: மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது..! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கடும் விமர்சனம்!

பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், ஆவணி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், பூக்களின் வரத்து குறைவாக உள்ளதாலும் மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பிற பூக்களைப் பொறுத்தவரை, முல்லை ரூ.1200, பிச்சி ரூ.1000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, செவ்வந்தி ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை உயர்ந்துள்ள நிலையில், மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ளதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.