Madurai Flower Price Today: மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. அதன் நறுமணம் மற்றும் தரம் ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற திகழ்கிறது, மதுரை மல்லி. தற்போது நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகையின் இன்றைய விலை கிலோ ரூ.2,500 என நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே முல்லை ரூ.1,300, பிச்சி ரூ.1,200, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, அரளி ரூ.300 என பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு பூக்களின் விலையில் கணிசமான விலையேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, மதுரை மல்லிகையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அடுத்து வருகின்ற சில நாட்களிலும் இன்னும் விலை உயரலாம்' என்றார்.
இதையும் படிங்க: அமைச்சராக உதயநிதியின் முதல் பதில் - உலகக்கோப்பை கபடி தமிழகத்திலா?