ETV Bharat / state

'ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை அறிக்கை செப்டம்பரில் தாக்கல்' - நீதிபதி ராஜேஸ்வரன் - மதுரை

மதுரை: "ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையும் வரும் செப்டம்பர் மாதம், தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும்" என, நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

jallikattu,protest,comission
author img

By

Published : Feb 1, 2019, 5:43 PM IST

சென்னை மெரினாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் பொதுமக்களை கலைந்து செல்வதற்காக போலீஸார் தடியடி நடத்தியதால் கலவரமானது. இதுதொடர்பாக, அன்றைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான அந்த ஆணையம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்து விசாரணை நடத்தி வந்தது. மதுரையில் நடந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி ராஜேஸ்வரன் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் கடைசி நாள் நடைபெற்ற வன்முறை குறித்த விசாரணை மதுரையை பொருத்தவரை முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. மதுரையில் மட்டும் சுமார் 1002 மனுக்கள் பெறப்பட்டு, மொத்தம் 1,018 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

விசாரணை முடிவில் ஒட்டு மொத்தமாக பெறப்பட்ட இந்த மனுக்களில் 511 பேர் ஒரே மாதிரியான நிகழ்வுகளில் புகார் அளித்திருந்தனர். ஆகையால் விசாரணை ஆணையம் அந்த மனுக்களை நிராகரித்தது.

சம்மன் அனுப்பியும் வராதவர்கள் 257 பேர். தவிர மீதமுள்ள அனைவரையும் விசாரணை ஆணையம் முழுவதுமாக விசாரித்துள்ளது. இந்த விசாரணையில் பெரும்பாலும் அனைத்து தரப்பு பொதுமக்களும் இறுதியில் நடைபெற்ற வன்முறைக்கு, வெளியிலிருந்து வந்த நபர்களின் தூண்டுதல் தான் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். காவல்துறை மீது இவர்கள் அளித்துள்ள புகார் என்பது மிகக் குறைவு.

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை, மதுரையை பொறுத்தவரை முடிவடைந்துவிட்டது. இனி சென்னையில் விசாரணை தொடரும். அங்கும் விசாரணை முடிந்த பிறகு வருகின்ற செப்டம்பர் மாதம் முழு அறிக்கையையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்வோம். அதில் சில பரிந்துரைகளும் இடம்பெறும், என்றார்.

undefined

Intro:ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம் விசாரணை மதுரையில் இன்று நிறைவு பெற்றது

Body:ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம் விசாரணை மதுரையில் இன்று நிறைவு பெற்றது

கடந்த 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் அதே ஆண்டு ஜனவரி இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான இந்த ஆணையம் மதுரை திருச்சி கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்து விசாரணை நடத்தி வந்தது இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற இறுதி கட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில் நீதிபதி ராஜேஸ்வரன் விருந்தினர் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் கடைசி நாள் நடைபெற்ற வன்முறை குறித்த விசாரணையில் மதுரை பொருத்தவரை முழுவதுமாக முடிவடைந்தது மதுரையில் மட்டும் 1002 மனுக்கள் பெறப்பட்டு ஆணையம் மூலமாக மேலும் கூடுதலாக 12 பேர் அழைக்கப்பட்டனர் ஆக மொத்தம் ஆயிரத்து 18 பெயர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

இந்த மனுக்களில் 511 பேர் ஒரே மாதிரியான நிகழ்வுகளில் புகார் அளித்திருந்தனர் ஆகையால் விசாரணை ஆணையம் அந்த மனுக்களை நிராகரித்தது. சம்மன் அனுப்பியும் வராதவர்கள் 257 பேர் மீதமுள்ள அனைவரையும் விசாரணை ஆணையம் முழுவதுமாக விசாரித்துள்ளது மதுரையில் இந்த முறை நடைபெற்ற இறுதிக் கட்ட விசாரணையில் 50 பேர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்

இந்த விசாரணைகளில் பெரும்பாலும் அனைத்து தரப்பு பொதுமக்களும் இறுதியில் நடைபெற்ற வன்முறைக்கு வெளியில் வந்த நபர்களால்தான் அவர்களின் தூண்டுதலால் தான் நடைபெற்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர் காவல்துறை மீது இவர்கள் அளித்துள்ள புகார் என்பது மிகக் குறைவு இது மதுரையை பொறுத்தவரை நடைபெற்ற விசாரணை

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை மதுரையை பொறுத்தவரை முடிவடைந்துவிட்டது இனி சென்னையில் விசாரணை தொடரும் அங்கும் விசாரணை முடிந்த பிறகு வருகின்ற செப்டம்பர் மாத வாக்கில் முழு அறிக்கையையும் விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் வழங்கும் அதில் சில பரிந்துரைகளும் இடம்பெறும் என்றார்

இதற்குரிய வீடியோக்கள் (TN_MDU_FEB_01_JALLIKATTU_RAJESWARAN_ENQUIRY_9025391 என்ற பெயரில் 3 எண்ணிக்கையில் fetch செய்யப்பட்டுள்ளன)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.