ETV Bharat / state

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்.. பெருங்காமநல்லூரின் தியாகச்சுவடுகள்..! - Usilampatti News

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் கிராம மக்கள் வெள்ளையனை நெஞ்சுக்கு நேராக எதிர்த்து நின்று போரிட்டு, 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 103 ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, இன்றைக்கும் அந்த மாபெரும் தியாகச் சுவடுகளை தாங்கி நிற்கிறது பெருங்காமநல்லூர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்...

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 2, 2023, 6:21 PM IST

Updated : Apr 2, 2023, 11:17 PM IST

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேவுள்ளது, பெருங்காமநல்லூர். பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிட்ட சில சமூக மக்களை ஒடுக்குவதற்காக குற்றப்பழங்குடி அல்லது குற்றப்பரம்பரை சட்டத்தைக் கொண்டு வந்து, அதனை அமல்படுத்துவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். ஆனால், இந்தச் சட்டத்தை ஏற்கமாட்டோம் என ஒன்று திரண்டு வெள்ளையர்களின் காவல்துறையை கடுமையாக எதிர்த்தவர்கள்தான், பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தார்.

1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் ஊரைச் சுற்றி வளைத்த ஆங்கிலேயக் காவல்துறையை எதிர்த்து வேல் கம்பு, ஈட்டி, ஏர் கலப்பை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு சண்டையிட வந்த மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டு அழிக்க முடியாத வரலாற்றுத்தடத்தை வெள்ளையர்கள் ஏற்படுத்திச்சென்றனர்.

இன்றைக்கு 103 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், இன்றைக்கும்கூட அதன் வரலாற்றுச்சுவடுகளை பெருங்காமநல்லூர் சுமந்து கொண்டிருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவிலும் தங்களுக்கான அங்கீகாரம் இல்லாத வேதனையும் நீரு பூத்த நெருப்பாக கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் இந்த வீர வரலாறு பள்ளிப் பாடத்திட்டத்தில்கூட இடம் பெறவில்லை என்ற வேதனையும், வலியும் அந்த மக்களிடம் நிறைந்துகிடப்பதைக் காண முடிகிறது.

பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வ பிரீதா கூறுகையில், ''இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் நேரடி தொடர்புடைய ஊர், பெருங்காமநல்லூர். கடந்த 1871ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு குற்றப்பழங்குடி அல்லது குற்றப்பரம்பரை சட்டத்தைக்கொண்டு வந்தது. இந்தியாவில் வாழ்ந்த சில குறிப்பிட்ட பூர்வகுடி மக்களை குற்றப்பழங்குடிகள் என்ற பெயரால் குறிப்பிட்ட சில போர்க்குடி சமூகங்களை ஒடுக்குவதற்கு, இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்த வெள்ளைக்கூட்டம் சட்டம் கொண்டு வந்ததுதான் ஆகப்பெரும் கொடுமை.

குற்றப்பழங்குடி என்று அறிவிக்கப்பட்ட சமூகம் இந்திய ஒன்றியம் முழுக்க 20 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவிலும்கூட இச்சமூக மக்கள் குற்றவாளிகளாக பார்க்கப்படுவதுதான் மிகப்பெரும் வேதனை. வெள்ளையர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய, இப்போராட்டம் குறித்து பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

வடஇந்தியாவில் முதல்முதலாக கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் கடந்த 1911ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்திற்கும் அமுல்படுத்தப்பட்டது. 1914ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில்தான் முதன் முதலாக இச்சட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏறக்குறைய இப்பகுதியிலிருந்த 68 சமூகத்தார் இச்சட்டத்தின் வாயிலாக குறி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சமூகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

அடுத்தடுத்த பகுதிகளுக்கும் இதனைக்கொண்டு வரும்போதுதான், எங்கள் பகுதியில் அன்றைக்கிருந்த எட்டு நாட்டு பிரமலைக்கள்ளர் சமூகங்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்டத்திற்கு நாங்கள் அடிபணியமாட்டோம் எனத் தீர்மானம் இயற்றின. அன்றைய காலகட்டத்தில் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரையறைகளில் எங்களுக்கு எதுவும் பொருந்தாத நிலையில், போர்க்குடி சமூகமாக பிரமலைக்கள்ளர் மீது வெள்ளையர்கள் நெருக்குதல் காட்டினார்கள். விவசாயம் செய்தாலும் காவல் பணியே எங்களுக்கு முதன்மையாக இருந்தது'' என்கிறார்.

பணியமாட்டோம் என தீர்மானம் இயற்றிய பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசு அச்சட்டத்தைச் செயல்படுத்த தீவிர முனைப்புக் காட்டியது. பெருங்காமநல்லூர் மக்கள் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் தாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையோடு இருந்தபோதுதான் கடந்த 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் நாள் பிரிட்டிஷ் காவல்படை துப்பாக்கிகளோடு பெருங்காமநல்லூரை சுற்றி வளைத்தது. இதற்காக எங்கும் ஓடி ஒளியாத இந்த மக்கள், தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சிறிய போருக்குத் தயாராய் முன்னேறி வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எச்சரிக்கைகூட விடுக்காமல் மார்பு, தலை, முகத்துக்கு நேராக சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில், பிறமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 15 ஆண்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். வீழ்ந்த கிடந்த ஆண்களுக்கு தண்ணீர் புகட்ட வந்தார் என்று கூறி, மாயக்காள் என்ற பெண்ணையும் துப்பாக்கி முனையால் குத்திக் கிழித்தனர். ஆனாலும் விடாமல் அவர் போராடினார். படுகாயமடைந்த அவர் ஏப்ரல் 5ஆம் நாள் உயிரிழந்தார். இந்த நிகழ்வில் உயிரிழந்த ஒரே பெண், மாயக்காள். சுடப்பட்டு இறந்த அந்த வயல்வெளிப் பகுதியிலேயே இறந்தவர்கள் அனைவரையும் ஊர் மக்கள் தகனர் செய்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய கருப்பத்தேவரின் கொள்ளுப்பேரன் முத்தையா கூறுகையில், ''இந்த சம்பவம் நடைபெற்றதற்குப் பிறகு இங்குள்ள மக்களின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றம் கருதி இருபாலர் பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் டிஎன்டி, டிஎன்சி என்ற பெயரால் தனிச்சலுகைகள் தனி ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்டன. அந்த சலுகைகளை அனுபவித்தவன் நான். ஆனால், கடந்த 1979ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இந்த சலுகையை நீக்கிவிட்டார்கள். இழந்த சலுகைகளை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த தமிழக அரசும் எங்கள் கோரிக்கைகளை கேட்கத் தயாராக இல்லை'' என்கிறார்.

இந்தச் சட்டத்தின் படி பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் மாலை 6 மணிக்கு அந்தந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கையெடுத்திட்ட பிறகு, இரவு முழுவதும் அங்கு தங்க வேண்டும். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக இளைஞர், முதியோர் என பாரபட்சமின்றி அனைவரும் கடும் பாதிப்பிற்கு ஆளாயினர். இந்த உள்ளக்குமுறலே பின்னாளில் பீறிட்டெழுந்தது, வெள்ளைகார காவல் படையோடு மோதுவதற்கு காரணமாக அமைந்தது.

இதுகுறித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் நவமணிமாறன் கூறுகையில், இந்திய சுதந்திர வரலாற்றில் 1919ஆம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது பெருங்காமநல்லூர் படுகொலை. சாதாரண ஏழை, எளிய மக்களிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. தன்னுடைய காலனி ஆதிக்க நாடுகளில் உள்ள பூர்வகுடி மக்களை ஒடுக்குவதற்காக குற்றப்பழங்குடி சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 1871ஆம் ஆண்டு கொண்டு வந்தது. 1914ஆம் ஆண்டிலிருந்து 1918ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டத்தை மிகக் கொடூரமாக நடைமுறைப்படுத்தினார்கள்.

இதனை எதிர்த்துப் போராடிய பெருங்காமநல்லூர் மக்களை சுட்டுக்கொன்றதோடு, கைது செய்யப்பட்ட 750 நபர்களை மாடுகளைப் போன்று வைக்கோல் பிரியால் கட்டி, மதுரை பசுமலையில் அன்று இயங்கி வந்த காவல்துறை அலுவலகத்திற்கு கால்நடையாக அழைத்துச் சென்றார்கள். அச்சமயம் பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் பயின்று கொண்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், இந்தக் காட்சியை கண்டபிறகுதான், கைரேகை சட்டத்தை நீக்குவதற்கு உறுதியெடுத்துக்கொண்டார்.

அச்சமயம் மதுரையில் வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டிருந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோஸப் கைரேகை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நின்று அதனை நீக்குவதற்கு அரும்பாடுபட்டார். பசும்பொன் தேவர் கடந்த 1934ஆம் ஆண்டு கமுதியில் கைரேகைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அந்தக் கோரிக்கை பின்னாளில் காங்கிரசின் அரசியல் முழக்கமாக மாறியது'' என்கிறார்.

மேலும், “குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்காகவும் சட்டப் போராட்டம் நடத்தி அவர்கள் வெளியே வர உறுதுணையாக இருந்தார், ஜார்ஜ் ஜோஸப். இவர் ஜவஹர்லால் நேருவின் தந்தையோடு மிக நட்புடன் இருந்தவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமான நபர்களுள் ஒருவராகவும் ஜார்ஜ் ஜோஸப் இருந்தார்.

தங்களைக் காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோஸப் நினைவாக தங்கள் குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயரிட்டனர். இன்றைக்கும் இப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு நபர்களுக்கு ரோசாப்பூத் தேவர், ரோசாப்பூ என்ற பெயர்கள் உள்ளன” என தெரிவித்தார்.

தொடர்ந்து நவமணிமாறன் கூறுகையில், ''கடந்த 1948ஆம் ஆண்டு கைரேகைச் சட்டம் நீக்கப்பட்டாலும், குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்ற 'ஹேபிட்சுவல் அஃபெண்டர் (habitual offender)' என மறுவடிவம் எடுத்துக் கொண்டது. அது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்பதுதான் மிகப்பெரும் கொடுமை. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற இடம் இன்றைக்கும் வரலாற்றைச் சொல்லும் அருங்காட்சியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதில் படுகொலையானவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பெருங்காமநல்லூர் வரலாறு இன்று வரை பதிவு செய்யப்படவில்லை. பாதுகாக்கப்படவும் இல்லை. விடுதலை பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான், பெருங்காமநல்லூர் தியாகிகள் சுடப்பட்டு இறந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஊருக்கு நடுவே கடந்த 1992-ஆம் ஆண்டு அன்றைக்கு அவைத்தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தையா முயற்சியின் பேரில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது” என்கிறார்.

பெருங்காமநல்லூர் வயல்வெளியெங்கும் வெள்ளையரை வீரமாக எதிர்த்த தீரர்களின் எலும்பும் சதையும் விரவிக் கிடக்க உடலிலிருந்து பீறிட்டெழுந்த ரத்தம் செந்நீராய்ப் பாய்ந்து. 103 ஆண்டுகளுக்கும் பிறகும் அந்த மண்ணின் தியாக வரலாற்றை இன்றைக்கும் அங்கு விளையும் நெற்கதிர்கள் வரலாறாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த வரலாறு அந்த மண்ணைத் தாண்டி வேறெங்கும் செல்லவில்லை என்பது சமகாலத்தின் அவலமே.

இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!

Last Updated : Apr 2, 2023, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.