ETV Bharat / state

ஐடி மென்பொருள் ஏற்றுமதி வருமானம் - ஆயிரம் கோடியைக் கடந்து சாதனை படைத்த மதுரை - மென்பொருள் ஏற்றுமதி

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மென்பொருள் ஏற்றுமதியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி மதுரை சாதனை படைத்தது.

ஐடி மென்பொருள் ஏற்றுமதி வருமானம் - ஆயிரம் கோடியைக் கடந்து சாதனை படைத்த மதுரை

author img

By

Published : Oct 29, 2022, 10:15 PM IST

மதுரை: தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மென்பொருள் ஏற்றுமதியில் ரூ.1,112 கோடிக்கு வருமானம் ஈட்டி கோவில் மாநகரமான மதுரை சாதனை படைத்துள்ளது. ஒவ்வோராண்டும் மென்பொருள் துறையில் வளர்ந்து வருவதுடன், அது சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் பெருநகராக மதுரை மாறி வருகிறது.

தென் மாவட்டங்களின் தலைநகராகவும், மொழி, பண்பாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வகையில் பண்டைய காலம் முதல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மாநகராகவும் மதுரை திகழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் சாதி அடிப்படையிலான பிணக்குகள் அதிகம் இருந்த காரணத்தால் பெரிய தொழிற்சாலைகளோ நிறுவனங்களோ இங்கு தங்களது சேவையைத் தொடங்க தயக்கம் காட்டின.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவல்

அதே நேரம் மதுரையின் வளர்ச்சியை மையப்படுத்திய தொழில்கள் பெருக வேண்டும் என்பதில் தமிழ்நாட்டை ஆண்ட அரசுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டன. அந்த வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இதன் தொடர்ச்சியாக மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது கிளையை மதுரையிலும் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்து வருகின்றன.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ஐடி பணியாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வர்த்தக தொழிற்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில்,

“கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்துறையின் வாயிலாக ஒவ்வோராண்டும் ஈட்டிய வருமானம் குறித்து புள்ளிவிபரங்கள் தரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மதுரை கடந்த 2017-18ஆம் ஆண்டில் ரூ.236.66 கோடியும், முறையே 2018-19, 2019-20, 2020-21 மற்றும் 2021-2022ஆம் ஆண்டுகளில் ரூ.439 கோடி, ரூ.692.04 கோடி, ரூ.821.64 கோடி, ரூ.1,112.57 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,301.90 கோடியை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளது.

இதே காலகட்டத்தில் சென்னை ரூ.1,62,996.21 கோடியும், செங்கல்பட்டு ரூ.1,58,878.66 கோடியும், காஞ்சிபுரம் ரூ.91,686.45 கோடியும், கோயம்புத்தூர் ரூ.26,504.60 கோடியும், திருச்சி ரூ.413.23 கோடியும், சேலம் ரூ.194.38 கோடியும், திருநெல்வேலி ரூ.38.96 கோடியும், கிருஷ்ணகிரி ரூ.2.99 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2017-18ஆம் ஆண்டில் ரூ.68,153.38 கோடியாக இருந்த வருமானம் 2021-22ஆம் ஆண்டில் ரூ.1,09,162.32 கோடியாக உயர்ந்துள்ளது. மேற்கண்ட ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.4,44,017.38 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த மற்றொரு ஆர்டிஐ கேள்வியில், இலந்தைக்குளத்தில் உள்ள எல்காட்டில் கடந்த 2022 மார்ச் 31-ஆம் தேதி வரை 7 ஆயிரத்து 363 பேரும், வடபழஞ்சி எல்காட்டில் 739 பேரும் பணியாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு துணைவேந்தர்களை நியமிக்க முடியுமா? யூஜிசி முன்னாள் துணைத் தலைவர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.