மதுரை மேலமாசிவீதி கதர் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவானது இன்று (அக.2) கொண்டாடப்பட்டது.
இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் அவர்கள் கதர் விற்பனையை தொடங்கி வைத்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.பி., சு. வெங்கடேசன், "மகாத்மாவின் பிறந்த நாளன்று அவர் அரையாடை தரித்த இந்த இடத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம்.
இதன் மூலம் அவர் விரும்பிய விவசாயிகளுக்கான தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பாலியல் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியை காவல் துறையினர் நடத்திய விதம் மிக தவறானது.
இந்த விவகாரத்தின் மூலமாக உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது? என்ற கேள்வியை அனைவருக்குள்ளும் எழுப்பி உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தொடரும் அவலம்: உ.பி.-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!