ETV Bharat / state

மதுரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வித்திடுகிறதா அரசு? - மதுரை நீர் நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர் பஞ்சத்திற்கு வித்திடுகிறதா அரசு

மதுரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வித்திடுகிறதா அரசு என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனக்கன்குளம் கிராம மக்கள் பேட்டி
தனக்கன்குளம் கிராம மக்கள் பேட்டி
author img

By

Published : Mar 30, 2021, 6:09 PM IST

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது தனக்கன்குளம் கிராமம். இப்பகுதியில் பொதுமக்கள் கடும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தக் கிராமத்தின் தென்பகுதியில் சின்னக்கண்மாய் அமைந்துள்ளது. இதற்குள் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகமே போராட்டத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தனக்கன்குளம் 6ஆவது வார்டு கவுன்சிலர் ஜெகநேசன் கூறுகையில், "கடந்த 1979ஆம் ஆண்டு இந்தக் கண்மாய்க்குள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அமைக்க, அப்போதிருந்த எங்களது ஊராட்சித் தலைவர் அனுமதி அளித்தார்.

வேலைவாய்ப்பு தருவோம் என நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் உள்ள 5.5 ஏக்கர் நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சின்னக்கண்மாயை ஒட்டியுள்ள பிஆர்சி காலனி, குறிஞ்சிநகர், அரவிந்த் நகர், ஐயனார் காலனி, கலைநகர், முல்லைநகர், சௌபாக்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கான குடிநீர் ஆதாரமாகத் திகழும் சின்னக்கண்மாயை நெடுஞ்சாலைத் துறை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்துவருகிறது. கண்மாயைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கண்மாயிக்கு நீர்வரத்து தாலுகா அலுவலகம், மொட்டைமலை ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மூலம் வருகிறது. இவை இரண்டையும் அடைத்துவிட்டார்கள். நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்போவதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து புகார் மனுக்கள் பல்வேறு தரப்புக்கு அனுப்பியும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை" என்றார்.

தனக்கன்குளம் கிராம மக்கள் பேட்டி

தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு இந்தக் கண்மாய் மட்டுமே நீராதாரமாக உள்ளது. இதனையும் அடைத்துவிட்டால் தாங்கள் எங்கே செல்வது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தனக்கன்குளம் காங்கிரஸ் கட்சியின் கிளைத் தலைவர் அன்னக்கொடி கூறுகையில், "இந்தக் கிராமம் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய ஊராக இருந்தது. மக்கள் தொகை காரணமாகப் பல்வேறு காலனிகள் இங்கே உருவாகியுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை பணிமனைக்காக அப்போது எங்களிடம் இடம் கேட்டார்கள். அவர்களின் இடம் போக பிற பகுதிகளில் மழைக் காலங்களின்போது தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்புவரைகூட இரண்டடி தண்ணீர்ச் சாலை வரைக்கும் நின்றது. தற்போது சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள். கிராம மக்கள் எங்கே செல்வார்கள்" எனக் கேட்டார்.

தனக்கன்குளம் ஊரைச் சுற்றி நான்கு ஊருணிகளும் பெரிய கண்மாய் ஒன்றும் உள்ளன. மதுரையிலுள்ள முக்கியமான நீர்நிலைகள் அனைத்தும் மாவட்ட நீதிமன்றமாகவும், உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடமாகவும் மாறிவிட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தனக்கன்குளம் திமுக கிளைச் செயலாளர் எல். சுந்தர் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்பாக நெடுஞ்சாலைத் துறையின் எஞ்சியுள்ள இடத்தில் அரசு மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி கோரியபோது, நீர்நிலைகளில் அமைக்க அனுமதி தர முடியாது என்று இதே நெடுஞ்சாலைத் துறை எங்களிடம் கூறியது. ஆனால் அவர்கள் மட்டும் சுற்றுச்சுவர், குடியிருப்புகள் கட்டலாம்" என்றார்.

தனக்கன்குளம் கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது சின்னக்கண்மாய். மதுரையின் மிகப் பெரிய நீர்நிலைகளுள் ஒன்றான நிலையூர் கண்மாய்க்கு, சின்னக்கண்மாயிலிருந்து நீர் செல்கிறது.

தனக்கன்குளம் ஏழாவது வார்டு கவுன்சிலர் சாந்தி கூறுகையில், "இங்கு அமைக்கப்படும் சுற்றுச்சுவரால் நீர்வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும். மதுரை மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடியாக இதில் தலையிட்டு இதற்கு வழி காண வேண்டும்" என்றார்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் சந்திரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "தற்போதுள்ள இடம் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. குடியிருப்பு கட்டப்படுவதாகச் சொல்லப்படுவது தவறு. தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ஒன்றை அமைக்கவிருக்கிறோம். இப்பகுதி மக்கள் இந்த வளாகத்தை பொதுக்கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து கேள்வி கேட்ட காவலரை அவர்கள் மிரட்டியுள்ளனர். வளாகத்திலிருந்த சில பொருள்கள் சேதமடைந்தும் காணாமலும் போகியுள்ளன. இதனைத் தடுப்பதற்காக பொதுவான சுற்றுச்சுவரை அமைக்கிறோம். இங்குள்ள நீராதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. 4.25 ஏக்கர் நிலம், இத்தனை ஆண்டு காலம் பராமரிப்பின்றி இருந்தது. தற்போது அரசு நிதி ஒதுக்கியுள்ள காரணத்தால் சுற்றுச்சுவர் அமைக்கிறோம். வரத்து கால்வாய்களை அடைக்கவில்லை.

அலுவலகத்திற்குப் பின்புறம் மரம் வளர்ப்பதற்குக்கூட உள்ளூர் மக்களுக்கு அனுமதியளித்துள்ளோம். மேலும் மூன்றாயிரம் மரங்கள் நடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். நீர்நிலைகள் எங்களால் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாது. இன்னும் சொல்லப்போனால், இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக எங்கள் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

பொதுமக்களுக்கு உபயோகமான நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் புதிய மைல்கல்: நீர்வளத்துறை அமைச்சகம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.