ETV Bharat / state

234 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் திமுக சின்னத்தில் மட்டுமே போட்டியிட தயாரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு
author img

By

Published : Jan 18, 2021, 5:49 PM IST

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியான தாராபட்டியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணியை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, "வைகையாற்றின் குறுக்கே,ரூ.18 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு நிலையூர், கொடிமங்கலம், மாடக்குளம், தேனூர் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை தேக்கி குடிநீர் ஆதாரத்தை உயர்த்தியுள்ளோம். இது தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் வெற்றி.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முழுவதும் பொய்தான், 234 தொகுதியிலும் வெற்றி பெறுவேன் என்கிறார். அவரது தங்கை கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றனர்.

பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு

மாநிலத்தில் உள்ள 234 தொகுதியிலும் திமுக சின்னத்தில் மட்டுமே நின்று ஸ்டாலினால் ஜெயிக்க முடியுமா..? இதனை சவாலாக ஏற்றுக் கொள்வாரா ஸ்டாலின்? திமுகவினர் என்ன குட்டி கரணம் அடித்தாலும் ஆட்சிக்கு வரவே முடியாது.

பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.2500-ஐ இன்னும் 3.50 லட்சம் பேர் வாங்கவில்லை. அதனை வருகிற 25ஆம் தேதிவரை வாங்கிக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளோம். வாங்காதவர்கள் வாங்கி கொள்ளலாம்.

அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவில் விலையில்லா கரோனா தடுப்பூசியை வழங்கி சுகாதார பணியாளர், மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதை எதிர்க்கட்சிகள் விஷம செய்தியாக திரித்து அரசியல் செய்கின்றனர். தடுப்பூசியால் எந்த பிரச்னையும் வராது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு தொகை அறிவிப்பில் எந்த முறைகேடும் வராது, அலுவலர்கள் அதனை சரியாக கண்காணித்து கொண்டு இருப்பர்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.