ETV Bharat / state

சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்க இடைக்கால தடை - Madurai district news

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்க இடைக்கால தடை!

author img

By

Published : Jan 6, 2023, 7:23 AM IST

சிவகங்கை: சிங்கம்புணரியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சிங்கம்புணரி பகுதியில் சுமார் 70,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த டவுன் பஞ்சாயத்தில் மக்கள் கூடும் ஒரே இடமாக சீரணி அரங்கம் உள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பால்குடம் எடுப்பது, மஞ்சுவிரட்டு நடத்துவது போன்ற பொது நிகழ்வுகள் இந்த அரங்கத்திலேயே நடத்தப்படும். இந்த அரங்கம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகும். இந்த நிலையில் சிங்கம்புணரியின் டவுன் பஞ்சாயத்து தலைவர், சீரணி அரங்கத்தை எடுத்து விட்டு டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் புதிய வணிக வளாகம் கட்ட முயற்சி செய்து வருகிறார்.

சிங்கம்புணரி டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக 15 ஏக்கர் காலியிடம் உள்ள நிலையில், அங்கு இந்த கட்டடத்தை கட்டாமல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள சீரணி அரங்கத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள அரசு பள்ளி நிகழ்வுகள் இந்த அரங்கத்தில்தான் நடத்தப்படும்.

இப்பகுதியில் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பள்ளிக் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாவர். எனவே, சீரணி அரங்கத்தை இடிக்க தடை விதித்து, சிங்கம்புணரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட உத்தரவிட வேண்டும்‌" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சீரணி அரங்கத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சிங்கம்புணரி டவுன் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.