தூத்துக்குடி: தட்டப்பாறை, மீளவிட்டான் இரட்டை ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆய்வு மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதைகளின் இணைப்பு பணிகள் தட்டப்பாறை, மீளவிட்டான் ரயில் நிலையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆய்வுக்கு பின் அனுமதி
ஏழு கிலோ மீட்டர் தூர புதிய இரட்டை ரயில் பாதையில், பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆகஸ்ட் 14 அன்று ஆய்வு நடத்துகிறார்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி தகுதி சான்றிதழ் கொடுத்தவுடன், இந்தப் புதிய இரட்டை ரயில் பாதையில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.