ETV Bharat / state

கரூரில் வருமான வரித்துறையினர் தாக்கப்பட்ட வழக்கு; வீடியோ பதிவை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Karur IT officers hit bail: வருமான வருத்துறையினர் தாக்கபட்ட வழக்கில் ஜாமீன் பெற்றவர்கள் 4 பேர் வீடியோ பதிவில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்து காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court
மதுரை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 6:53 AM IST

மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த மே 25ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதுடன், வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆவணங்களை பறித்துச் சென்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இதில் 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

இந்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், “இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ பதிவுகள் காவல்துறையிடம்தான் உள்ளது. அவர்கள்தான் சம்மந்தப்பட்ட 4 பேர் உள்ளனரா என்பதை கண்டுபிடித்து கூற வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, வருமான வருமான வரித்துறையினர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற 4 பேர், வீடியோ பதிவில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்து, காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: வேலம்பட்டி சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க முயற்சி? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.