ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு- கருத்துகணிப்பில் தகவல்

மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

கல்லூரி முன்னாள் மாணவர்கள்
author img

By

Published : Apr 28, 2019, 8:49 PM IST

இதுகுறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என மாநிலம் முழுவதும் நாங்கள் கருத்து கணிப்பு நடத்தினோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு

இதில் வாக்குப்பதிவு நடந்த 38 தொகுதிகளில், திமுக 33 தொகுதிகள் மட்டுமில்லாமல் நாகை, மயிலாடுதுறை போன்ற கூடுதல் தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேபோல் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

மேலும் இந்த தேர்தல் மூலம் ஆட்சிமாற்றம் வேண்டுமென்று மக்கள் அனைவரும் விரும்பி வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
28.04.2019

*2019 தமிழக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தகவல்*

மதுரை தனியார் விடுதியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்த கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன,

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் மற்றும் மக்கள் பண்பாடு தொடர்பக ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசியது,

நாடாளுமன்ற தேர்தலில் திமுக 33 தொகுதிகள் மட்டுமில்லாமல் நாகை, மயிலாடுதுறை போன்ற கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற வாய்ப்புள்ளது,

ஆட்சிமாற்றம் வேண்டுமென்று மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் விரும்பி வாக்களித்துள்ளனர்,

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என கருத்துக்கணிப்பில் தெரியவந்தது,

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நிச்சயம் எங்கள் ஆய்வு உண்மையாக இருக்கும்,

ஒருதொகுதிக்கு 200 பேர் என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது,

பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலும் மக்கள் பணம் வாங்கிக்கொண்டு திமுகவிற்கே வாக்களித்துள்ளனர்,

போன தேர்தலில் மோடியா லேடியா என்கிற மாய அலை உருவாக்கப்பட்டு வெற்றி பெற்றனர்,

இந்தமுறை ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார்,

மக்களிடையே யார் ஆட்சிக்கு வர வேண்டும், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் யாருக்கு வாய்ப்பு போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டே கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_28_LOYOLA COLLEGE OLD STUDENT PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.