ETV Bharat / state

பிடிஆர் கார் மீது காலணி வீசிய வழக்கு - ஜாமீனிலுள்ள 3 பேருக்கு நிபந்தனை தளர்வு

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் மனுதாரர்கள் 3 பேரும் மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

கார் மீது காலணி வீசிய வழக்கில்- 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்!

author img

By

Published : Nov 4, 2022, 10:31 PM IST

மதுரை: சேலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் பணியில் இருந்த ராணுவ வீரர் இறந்ததையடுத்து அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் காலணி வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் 3 நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து மாவட்ட கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தனர்.

தற்போது சேலம் மாவட்டத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்கண்ட 3 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சேலத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவும்; எனவே நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து கீழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவினை மாற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:15 வயது சிறுமி கர்ப்பம்: காரணமான முதியவர் அதிரடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.