ETV Bharat / state

நீட் தேர்வு வழிகாட்டுதல்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு! - நீட் தேர்வு வழிகாட்டுதல்கள்

மதுரை : நீட் தேர்வு மையங்களின் முன்பு வைக்கப்பட்ட தேர்வு வழிகாட்டுதல் பதாகைகள், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

நீட் தேர்வு வழிகாட்டல் தமிழ் மொழி புறக்கணிப்பு

author img

By

Published : Sep 13, 2020, 12:51 PM IST

நாடு முழுவதும் இன்று (செப்.13) நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 3,843 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 பரவல் காரணமாக ஒரு தேர்வு அறையில் 12 பேர் வரை தேர்வு எழுதுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் தற்போது கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வு நடைபெறுவதால் மாணவர்களும் பெற்றோரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இன்று சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிகின்றனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தருந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இன்று மதியம் மூன்று மணிக்கு தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களின் முன்பு வைக்கப்பட்ட தேர்வு வழிகாட்டுதல்கள் குறித்த பதாகைகளில், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இடம்பெற்று இருந்துள்ளன. இதனால் தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்களும் பெற்றோரும் குழப்பமடைந்தனர்.

நீட் தேர்வு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடைபெறுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிலுள்ள ஒரு தேர்வு மையத்தில் தமிழில் வழிகாட்டுதல்கள் வைக்கபடாத நிலையில், இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டையைப் பிடித்து நீட் வேண்டாம் என்றிருக்கலாம்: உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.