ETV Bharat / state

மனிதச் சங்கலிப் போராட்டத்தில் ஊடுருவிய நபரால் பரபரப்பு - human chain protest, person infiltrated

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஊடுருவிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மனித சங்கலியில் ஊடுருவிய நபரால் பரபரப்பு!
மனித சங்கலியில் ஊடுருவிய நபரால் பரபரப்பு!
author img

By

Published : Feb 1, 2020, 10:21 AM IST

மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் சார்பாக மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி இப்போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிலையில், போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்ற ஓட்டுநரும் அவரது நண்பரும் குடிபோதையில் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி ஒழிக கோஷம் எழுப்பினர்.

மனிதச் சங்கலியில் ஊடுருவிய நபரால் பரபரப்பு

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரது சட்டை கிழிக்கப்பட்டது. இதனையடுத்து அருகிலிருந்த காவல் துறையினர் வந்து தலையிட்டு அந்த நபரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஊடுருவிய நபரால் பரபரப்பு

மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் சார்பாக மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் இன்று நூற்றுக்கணக்கான பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.Body:இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஊடுருவிய நபரால் பரபரப்பு

மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் சார்பாக மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் இன்று நூற்றுக்கணக்கான பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு அமைப்புகள் கட்சிகளின் சார்பாக மதுரை பழங்காநத்தம் புறவழிச்சாலையில் நூற்றுக்கணக்கான பங்கேற்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜாங்கம் என்ற ஓட்டுநரும் அவரது நண்பரும் குடிபோதையில் பாரத் மாதா கி ஜே என்று முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி ஒழிக கோஷம் எழுப்பினர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நபர்கள் சிலருக்கும் விளக்கம் எழுதிய நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்து தலையிட்டு அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.