மதுரை விமான நிலையத்தில் தமிழக கோயில் நிலங்களை மீட்டெடுக்கும் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசினுடைய கொள்கை விளக்க குறிப்பில் இந்து சமய அறநிலையத்துறை இந்து கோயிலுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் உண்மையில் 15 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கும். இதில் 2020-க்குள் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு முழுமையாக மீட்டு கோயில்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் முழுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த திட்டம் உள்ளாட்சித் துறை, காவல்துறை, நில அளவியல் துறை அலுவலர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும்.
மேலும் யார், யாரெல்லாம் திருக்கோயில்களின் இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்களோ? அல்லது குற்ற செயலில் ஈடுபடுகிறார்களோ? அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தினால் ரூ.100 கோடி அளவிலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இதையும் படிங்க:கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஐ-எம் ஆர்ப்பாட்டம்!