ETV Bharat / state

உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்ற மனைவி: மீட்டுத்தரக் கோரி கதறும் கணவர்! - மனைவியை மீட்டுத் தரக் கோரி கணவர் புகார்

மதுரையில் உடற்பயிற்சி நடத்தி வருபவருடன் சென்ற தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்த கணவர்

author img

By

Published : Sep 26, 2020, 8:54 PM IST

மதுரை: உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளருடன் சென்ற தனது மனைவியை மீட்டுத்தரக் கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ் (26). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி கனிமொழி மூன்று வருடமாகியும் கர்ப்பமாகாமல் உள்ள நிலையால், மருத்துவரிடம் பரிசோதித்ததில் , கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. அதனை குறைப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தை நாட முடிவுசெய்தனர்.

பின்னர், மதுரை வில்லாபுரத்திலுள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்க்கப்பட்டார். அங்கு பயிற்சி மேற்கொண்டபோது யோகேஷ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. தொடர்ந்து கனிமொழி செல்ஃபோனில் பேசி பழகுவதை அறிந்த கணவர் ராஜேஷ், மனைவியை கண்டித்துள்ளார். இந்த விடயத்தை கனிமொழி யோகேஷிடம் கூறியபோது உடனடியாக தன்னுடன் கிளம்பி வருமாறு அழைத்துள்ளார். ஆனால், கனிமொழியை அவருடன் செல்ல விடாமல் கணவர் தடுத்துள்ளார்.

இந்த விடயம் தெரியவர, யோகேஷ் தனது நண்பர்களை கொண்டு கனிமொழியை அழைத்து வர முடிவுசெய்து, அவரது வீட்டில் கணவரை ‌மிரட்டி மனைவியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து கனிமொழி தனது கணவரை மறந்து, உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர் யோகேஷ் கண்ணனுடன் கடந்த மூன்று நாள்களாக இருந்துள்ளார்.

மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்த கணவர்

இந்நிலையில், யோகேஷ் கண்ணா ராஜேஷிடம் தொடர்பு கொண்டு, உனது மனைவியை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதாக, திருமங்கலம் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் டிஎஸ்பி வினோதினி ராஜேஷ் , கனிமொழி, யோகேஷ் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: மனைவி கண்முன்னே கணவனை துவைத்தெடுத்த காதலன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.