ETV Bharat / state

கொந்தகையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு - konthagai

மதுரை: கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ஆறாவது முறையாக நேற்று (ஆக.12) மற்றொரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொந்தகை
கொந்தகை
author img

By

Published : Aug 13, 2020, 3:03 AM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே ஐந்து எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அதே குழியில் மேலும் கூடுதலாக ஒரு மனித எலும்புக்கூடு நேற்று (ஆக.12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 183 செ.மீ உயரமும் 35 செ.மீ அகலமும் கொண்டதாகும்.

கண்டறியப்பட்டுள்ள அனைத்து எலும்புக்கூடுகளும் முழுமையான மூலக்கூறு ஆய்வுகளுக்குப் பிறகு அதன் காலமும், ஆணா பெண்ணா என்பது குறித்து முழுமையான விவரங்களும் தெரியவரும் என தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் கூறியுள்ளார்.

அகழாய்வு தளம் கொந்தகை

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை கூடுதலாக கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமக்காடான கொந்தகையில், பல்வேறு அளவுகளில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

இதையும் படிங்க:கொந்தகையில் கொத்துக்கொத்தாய் முதுமக்கள் தாழிகள்- பரபரப்பை ஏற்படுத்தும் கீழடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.