ETV Bharat / state

தமிழ்நாடு ஹோமியோபதி பதிவாளர் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை - Madurai High court News

மதுரை: எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிகள் சிகிச்சை அளிக்க தடை விதித்த தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக் கிளை இடைக்கால தடை
author img

By

Published : Nov 20, 2019, 4:46 AM IST

தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் பரத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டய படிப்பு முடித்து அச்சம்பத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறேன். எலக்ட்ரோபதி / எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புகள் மத்திய தொழில்துறையின் கீழ் வருகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிய முடியும்.

ஆனால் காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு அளித்து வருகின்றனர். இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரிடம் மனு அளித்தோம். ஆனால் பதிவாளர் எங்கள் கோரிக்கை நிராகரித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளிக்க கூடாது என கடந்த மார்ச் 5ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி முறைக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கடந்த ஜூலை 1ஆம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிகள் சிகிச்சை அளிக்க தடை விதித்து பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது.

ஏற்கனவே ஒரு வழக்கில் இந்தியா முழுவதும் தகுதியானவர்கள் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிய தடையில்லை என மத்திய, மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தன. இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது.
எனவே தமிழ்நாடு ஹோமியோபதிவு கவுன்சில் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்"என கூறியிருந்தார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 17பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டதாரிகள் சிகிச்சை அளிக்க தடை விதித்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நடிகை காயத்ரி ரகுராமைக் கைது செய்ய மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு!

Intro:எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்கள் சிகிச்சை அளிக்க தடை விதித்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Body:எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்கள் சிகிச்சை அளிக்க தடை விதித்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் பரத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டய படிப்பு முடித்து அச்சம்பத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறேன். எலக்ட்ரோபதி/ எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புகள் மத்திய தொழில்துறையின் கீழ் வருகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிய முடியும். ஆனால் போலீஸார் தேவையில்லாமல் தொந்தரவு அளித்து வருகின்றனர்.
இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரிடம் மனு அளித்தோம். ஆனால் பதிவாளர் எங்கள் கோரிக்கை நிராகரித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளிக்க கூடாது என 5.3.2019-ல் உத்தரவிட்டார். இதனால் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி முறைக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை 1.7.2019-ல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்கள் சிகிச்சை அளிக்க தடை விதித்து பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது.
ஏற்கெனவே ஒரு வழக்கில் இந்தியா முழுவதும் தகுதியானவர்கள் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிய தடையில்லை என மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தன. இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது.
எனவே தமிழ்நாடு ஹோமியோபதிவு கவுன்சில் பதிவாளரின்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்"
என கூறியிருந்தார்.
இதே கோரிக்கைக்காக மேலும் 18 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயதாரர்கள் சிகிச்சை அளிக்க தடை விதித்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.