ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி! - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

HighCourt
சாத்தான்குளம்
author img

By

Published : Apr 24, 2023, 5:59 PM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ தரப்பு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளன. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்" என்று கூறியிருந்தார்.

இந்த ஜாமீன் வழக்கு கடந்த வாரம், நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்றும், இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையைத் தாமதமாக்கி வருகின்றனர் என்றும், ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிறது - ஆகவே, மே மாத நீதிமன்ற விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(ஏப்.24) இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.