திருச்சியைச் சேர்ந்த சிவகாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தொற்று பரவத்தொடங்கியது.
உச்சநீதிமன்ற உத்தரவு
இதனால், 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளுக்கு பரோல், பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் கரோனா முதல் அலையின் போது கைதிகள் சிலருக்கு பரோல் விடுப்பு, பிணை வழங்கப்பட்டது.
விசாரணை கைதிகளுக்கு பிணை
தற்போது, தமிழ்நாட்டில் கரோனா நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு பரோல், பிணை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதே போன்ற வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இரண்டாம் அமர்வில் விசாரணைக்கு உள்ளதாக குறிப்பிட்டு அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்ந்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?