மதுரை: பல்வேறு இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில், பான் பராக் , குட்கா உள்ளிட்டப் போதைப்பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதுபோல், இயற்கை புகையிலையை விற்பனைக்குத் தடை விதித்து தஞ்சாவூர் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த தடையை நீக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி G.R.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யத்தடை இல்லை; விவசாயிகளிடம் புகையிலை இலைகளைப் பெற்று, வெல்ல நீர் தெளித்து, எந்த வேதியியல் பொருட்களும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதைக்கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யத்தடை இல்லை என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பாஜக பந்த் வழக்கு; போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்..!