தஞ்சாவூரைச் சேர்ந்த வைரசேகர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெற்றும், பெறாமலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர். பல இடங்களில் இந்தச் சிலைகள் காரணமாக சமூக ஒற்றுமையும் பாதிக்கப்படுகிறது.
சிலை வைக்கப்பட்டவர்களின் பிறந்தநாள், நினைவுநாளன்று அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் கூறி ஏராளமான கூட்டம் கூடுவதால், போக்குவரத்துப் பிரச்சினைகள் எழுவதால், பொதுமக்கள் மிகுந்த சிராமத்திற்கு ஆளாகினர்.
சமூகப் பிரச்சினைகள் எழக்கூடாது என்பதால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துச் சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றவும், அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடவும், புதிதாக சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் முதல் கோரிக்கையான தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்றுவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளூர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில் மழை!