ETV Bharat / state

காவல் நிலையங்களில் ஹைடெக் சிசிடிவி; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - மதுரை மாவட்ட செய்தி

காவல் நிலையங்களில் அதிநவீன கூடுதல் சேமிப்பு திறன் கொண்ட சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து தமிழ்நாடு கூடுதல் உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல் நிலையங்களில் அதிநவீன சிசிடிவி கேமரா குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

author img

By

Published : Feb 15, 2023, 8:46 AM IST

மதுரை: மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர் நகர் காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திடீர் நகர் காவல் நிலையத்தின் 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது காவல் நிலைய கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்ட போது 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான பதிவுகள் இல்லை. இதற்குக் காவல் நிலைய கேமரா பதிவு வசதியில் 15 நாள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும் என காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் 820 காவல் நிலையங்களில் 18 மாத பதிவுகளை சேமிக்கும் திறனுடன் என்விஆர் (நெட்ஒர்க் வீடியோ பதிவு) வசதி ஏற்படுத்த ரூ 18 கோடியும், முதல் கட்டமாக 251 காவல் நிலையத்தில் பழைய சிசிடிவி கேமராக்களை மாற்றியமைக்க ரூ.9.25 கோடியும் தேவை என திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட அறிக்கையை உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு டிஜிபி அனுப்பியுள்ளார். அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலாளர் 6வது எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 20க்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'ஏங்க... ஒர்க் ஷாப் தொழிலுக்கு பெண்கள் வரக்கூடாதா..?' - வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.