ETV Bharat / state

வாகன நிறுத்த காப்பகங்கள் வழக்கு: தகவலளிக்க நீதிமன்றம் உத்தரவு - திருநெல்வேலி செய்திகள்

மதுரை: நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் வாகன நிறுத்த காப்பகங்கள் தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலை மனுதாருக்கு அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU
author img

By

Published : Dec 5, 2019, 9:07 AM IST

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கணேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் உதவி செயற்பொறியாளர்கள் வாகன நிறுத்தக் காப்பகத்தை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை 3 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தியதோடு 12 மணி நேரத்திற்கு மேல் ஒருமணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கின்றனர்.

சுமார் 2700 வாகனங்கள் நிறுத்தப்படும் நிலையில் இங்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும், அவசரகால வழி வசதிகளும் இல்லை. இந்தப் பகுதியில் கட்டணம் செலுத்தாமல் நிறுத்தும் வாகனங்களை பஞ்சர் செய்வதோடு, வாகனத்தில் சில பாகங்களை எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அதேபோல இவர்களால் நடத்தப்படும் உணவகம் மற்றும் கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறையை பயன்படுத்த நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் தண்ணீர் வசதி இல்லை. சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் வாகன நிறுத்த காப்பகங்களை அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஏற்கனவே மனுதாரரின் மனு அடிப்படையில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தகவலை மனுதாரருக்கு அனுப்ப மேலப்பாளையம் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Intro:நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் வாகன நிறுத்த காப்பகங்களை அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தகவலை மனுதாரருக்கு அனுப்ப மேலப்பாளையம் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Body:நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் வாகன நிறுத்த காப்பகங்களை அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தகவலை மனுதாரருக்கு அனுப்ப மேலப்பாளையம் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் உதவி செயற்பொறியாளர்கள் வாகன நிறுத்தக் காப்பகத்தை நடத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை 3 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தியதோடு 12 மணி நேரத்திற்கு மேல் ஒருமணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கின்றனர். சுமார் 2700 வாகனங்கள் நிறுத்தப்படும் நிலையில் இங்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும், அவசரகால வழி வசதிகளும் இல்லை.  இந்தப் பகுதியில் கட்டணம் செலுத்தாமல் நிறுத்தும் வாகனங்களை பஞ்சர் செய்வதோடு, வாகனத்தில் சில பாகங்களை எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அதேபோல இவர்களால் நடத்தப்படும் உணவகம் மற்றும் கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறையை பயன்படுத்த நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் தண்ணீர் வசதி இல்லை.  சுகாதாரமாகவும்  பராமரிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே நெல்லை தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் வாகன நிறுத்த காப்பகங்களை அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஏற்கனவே மனுதாரரின் மனு அடிப்படையில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தகவலை மனுதாரருக்கு அனுப்ப மேலப்பாளையம் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.