மதுரை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்விற்கான விடைத் தாள் திருத்தும் போது மதுரை மையத்தில் தேர்வு எழுதிய 2 மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அதில், மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள ஒரு பள்ளியில் படித்த 2 மாணவர்களும் சில பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இதனால் தேர்வில் முறைகேடு செய்து உள்ளதாகவும், இதற்காக ஒரு மாணவர் எழுதிய தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது?, ஏன் 5 ஆண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கக் கூடாது? எனக் கூறி அரசுகள் தேர்வுகள் இணை இயக்குநர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்த நோட்டீசை ரத்து செய்யவும், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரியும் ஒரு மாணவரின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: வன்னியர் சங்க கட்டட விவகாரம்... உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
அந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தேர்வுகளில் முறைகேடுகள் ஈடுபடுவது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக் கூடியது என கருத்து தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் இணை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு முடியும் வரை மாணவருக்கு எதிராக எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருப்புமுனை ஏற்படுத்துமா அதிமுகவின் பொன்விழா மாநாடு?.. ஒரு அலசல்!