ETV Bharat / state

'அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட கோரி வழக்கு’ - மாநில கடலோர மண்டலம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 10:59 PM IST

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர், செயலர் உள்ளிட்டோர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யக்கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு குறித்து நீதிமன்ற உத்தரவு

மதுரை: மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு (Coastal Regulation Zone - 2019 notification) முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட உத்தரவிட கோரி தொடரப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர் ரோசாரியோ விஜோ. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கடலோர கடற்கரையை பாதுகாத்திடம் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு (Coastal Regulation Zone - 2019 notification) ஒன்றை வெளியிட்டது.

இதன் அடிப்படையில், கடலோர மீனவ மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு (Coastal Zone Management Plan-CZMP) தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் உண்மையில் கடலோரம் வாழும் மீனவ மக்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு (2019) குறித்து எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர்.

மற்றொரு தரப்பு அதை தவறான முறையில் புரிந்து கொண்டுள்ளனர். இதில் உள்ள விதிமுறைகள், சாதக பாதகங்கள் அவர்களுக்கு தெரியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புக்கு, கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிப்பது ( Coastal Zone Management Plan-CZMP) ஏற்படுத்துவது ஏற்புடையதாக இருக்காது.

மகாராஷ்டிரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிப்பது, அவர்கள் மொழியில் மொழி பெயர்கப்பட்டு அனுப்பபட்டு உள்ளது. எனவே இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.

இந்த மனு இன்று (செப்.20) நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து சுற்றுச்சூழல் துறைச் செயலாளர், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: "நாங்கள் திருடர்கள் இல்லை; எங்களை மனிதர்களாக மதியுங்கள்" - பழனி மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.