ETV Bharat / state

ராஜிவ் தண்டனை கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்கக்கோரி வழக்கு

28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில், மனுதாரரின் மனு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உள்பட்டு பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ravichandran
ராஜிவ் காந்தி
author img

By

Published : Sep 2, 2021, 5:48 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார்.

இந்த வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பர் 6இல் தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018 செப்டம்பர் 9இல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது.

இந்நிலையில் எனது கண்ணிற்கு 2019 ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக எனது மகன் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க கோரி 2 முறை மனு அளித்தேன். ஆனால் இரண்டு முறையும் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

எனது மற்றொரு கண்ணில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனக்கு வயது முதிர்வு என்பதால் என்னை கவனிப்பதற்கு, எனது மகனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க கோரி தற்போது மீண்டும் மனு அளித்துள்ளேன்.

இந்த மனுவை பரிசீலித்து 28 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிசந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரரின் மனு குறித்து தமிழ்நாடு உள் துறை செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்குள்பட்டு 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் " என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.