ETV Bharat / state

அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.. நீதிமன்றம் உத்தரவு! - புதிய வாடகை சட்டம் 2017

Madurai Adheenam Case: தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர், மதுரை ஆதீனத்திற்கு அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:35 PM IST

மதுரை: மதுரை ஆதீனம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக, மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேல மாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 2007ஆம் ஆண்டு 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது, இதற்கு மாத வாடையாக 2500 ரூபாய் என்றும் அதில் கட்டடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்குச் சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், ஒப்பந்த விதிகளை மீறி 2013ஆம் ஆண்டு மதுரை ஆதினம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்களால் பெரிய கட்டடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலை துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ் நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் (RDO) நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் மனுவை ரத்து செய்ய வேண்டும்" என ஆதீனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருன் சுவாமிநாதன், "இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78ன் படி கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நிலாக்கிரமப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம்.

அதை விசாரணை செய்த இணை இயக்குநர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து லால் ஆணையரிடம் முறையீடு செய்தார் அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழ நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது கோயில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்றும், வாடகை நிலுவைத் தொகைகளை மதுரை ஆதின மடம் வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு; அக்.30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.