மதுரையைச் சேர்ந்த ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "கரோனா நோய் பாதிப்பு மற்றும் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் பலரும் நிதியுதவியை வழங்க தயாராக உள்ளனர். ஆனால், பல மாவட்ட ஆட்சியர்கள் அதனை வாங்க தயாராக இல்லை. ஆகவே, அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் பி.என். பிரகாஷ், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதி என்பன போன்ற நிவாரண நிதிகளுக்காக தனிக்கணக்கு இருக்கும் நிலையில், கரோனா பாதிப்பிற்காக நிதி வழங்க தனி வங்கிக்கணக்கை உருவாக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு உருவாக்கினால் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா பாதிப்பில் பங்கெடுக்கும் வகையில் முடிவு செய்யலாம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரேசன் கார்டுகளுக்கு ரூ.15,000? - அவசர வழக்காக விசாரிக்க தடை