பேராம்பூர் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கிவருகிறது. அரசு விதிகளின்படி, ஆற்றின் இருகரைகளிலும் 23 மீட்டர் இடம் ஒதுக்கிவிட்டு ஆற்றின் நடுவில்தான் மணல் அள்ளவேண்டும். மேலும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தான் மணல் அள்ள வேண்டும்.
ஆனால், இந்த விதிகளை மதிக்காமல், இரண்டு கரைகளிலும் இடம் ஒதுக்காமலும் அரசு அனுமதித்த ஒரு மீட்டர் ஆழத்தையும் மீறி இரண்டரை மீட்டர் ஆழம்வரை மணல் அள்ளிவருகின்றனர். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் குடிநீரின் உப்புத்தன்மை அதிகரித்து குடிக்க தகுதியற்றதாகிவருகிறது.
இந்தக் குவாரியால் எங்கள் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகுள்ளாகின்றனர். விதிகளை மீறி இயங்கும் அரசு மணல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக் கோரி எங்கள் கிராமத்தின் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
எனவே, மக்களின் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோரையாற்றில் விதிகளை மீறி செயல்படும் அரசு மணல் குவாரி செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே அரசு மணல் குவாரிகளை கண்காணிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கோரையாற்றில் உள்ள அரசு மணல் குவாரியில் விதிமீறல் நடந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'கீழடியில் விரைவில் ஆறாம் கட்ட அகழாய்வு' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!