ETV Bharat / state

பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை முடிவு - மத்திய அரசு பதில் - மத்திய அரசு பதில் மனு

மதுரை: புதிய பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

madurai high court
author img

By

Published : Aug 5, 2019, 7:26 PM IST

Updated : Aug 5, 2019, 7:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழ்நாடு ஊரக பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் 2018 நவம்பர் 25ல் வெளியிட்டன. இதனால், ஏற்கனவே பெட்ரோல் நிலையங்கள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர்.

பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பது முரணாக உள்ளது. ஆகவே, புதிதாக 5125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கு, நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முந்தைய காலத்தை விட தற்போது வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அதிக பெட்ரோல் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் அரசு விதிக்கப்பட்ட அனைத்து விதிகளையும் பின்பற்றிதான் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Intro:புதிய பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை முடிவு - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதிய பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு,நீதிமன்றம் தலையிட முடியாது-மத்திய அரசு பதில்மனு.Body:புதிய பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை முடிவு - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதிய பெட்ரோல் நிலையங்கள் திறப்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு,நீதிமன்றம் தலையிட முடியாது-மத்திய அரசு பதில்மனு.

திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," தமிழக ஊரக பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் 2018 நவம்பர் 25ல் வெளியிட்டன. 2018 ஏப்ரல் 1 நிலவரப்படி தமிழகத்தில் தனியார் பங்குகள் உட்பட 5388 பெட்ரோல் பங்குகள் உள்ளன.

இந்நிலையில் குறைந்த கால அளவில், 5125 பெட்ரோல் பங்குகளைத் தொடங்க அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவு அரசியல் அழுத்தத்தில், முறையாக ஆய்வு செய்யப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனை பாதிக்கும். பெட்ரோல் பங்குகள் தடையில்லா சான்று வழங்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றை கருத்தில் கொள்ளாமல், தடையில்லா சான்று வழங்கி வருகின்றனர். பொது கட்டிடங்களுக்கும் பெட்ரோல் பங்குகளுக்கும் இடையே 100 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

மணிப்பூரில் புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்குவது தொடர்பாக மாநில அரசு உரிய விதிகளை வகுக்கும் வரை, புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க கூடாது என மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெட்ரொல் பங்குகளில் கழிவுப்பொருட்கள் பொதுக்கால்வாயில் விடப்படுகின்றன. இது பொதுசுகாதாரத்திற்கு கேடாக அமைகிறது.

தடையில்லா சான்று வழங்கும் போது மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்துவதில்லை. பெட்ரோல் நுகர்வு மற்றும் தேவை குறித்து உரிய கணக்கீடு செய்யாமல் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை இரட்டிக்க முடிவெடுத்துள்ளனர்.

இதனால் ஏற்கனவே பெட்ரோல் நிலையங்கள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர்.  பெட்ரோலுக்கான மாற்று எரிபொருளை கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பது முரணாக உள்ளது.

ஆகவே, புதிதாக  5125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே, டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு,செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது, .

அப்போது பெட்ரோலியம் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,முந்தைய காலத்தை விட தற்போது வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில்,அதிக பெட்ரோல் நிலையங்கள் தேவைபடுகிறது,

இது அரசின் கொள்கை ரீதியான முடிவு.இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும்,மேலும் அரசு விதிக்கப்பட்ட அனைத்து விதிகளையும் பின்பற்றி தான் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என பதில் மனு தாக்கல் செய்தனர்,

இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,ஏற்கனவே 4000 பெட்ரோல் நிலையங்கள் உள்ளது,மேலும் ஒரே நேரத்தில் 5000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கூறினார்.

,இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
Last Updated : Aug 5, 2019, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.